. 24 மனை தெலுங்கு செட்டியார்கள் தலைமைச் சங்கமும், அறக்கட்டளையும் இணைந்து நடத்திய திருமணமாலை மனை 24 தெலுங்கு செட்டியார்கள் தலைமைச் சங்கமும் 24 மனை தெலுங்கு செட்டியார்கள் அறக்கட்டளையும் இணைந்து நடத்திய திருமணமாலை நிகழ்ச்சி சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள 24 மனை தெலுங்கு செட்டியார்கள் தலைமைச் சங்க வளாகத்தில் 04-05-2025 ஞாயிற்றுக்கிழமையன்று தலைவர் திரு.K.C.பழனிசாமி அவர்களது ஆசியுடன் சிறப்பாக நடைபெற்றது.
- குத்துவிளக்கேற்றும் மங்கல நிகழ்வுடன் விழா தொடங்கியது.
- பின்பு தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது.
- சங்கத்தின் இணைத்தலைவர் திரு.K. சிவசண்முகம் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.
- சதுரங்க வீரர் ஆத்விக் அவர்கட்கு ஏப்ரல் 2025க்கான சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
- பிறகு 10`x8` அளவுள்ள LED திரை வழியாக செய்யப்பட்ட ஒளிபரப்புடன் தொடங்கியது.
- பொதுச் செயலாளர் திரு.V.அர்ஜூன் சூரஜ் உரையாற்றினார்.
- தலைமை நிலையச் செயலாளர் திரு.K.V.கிருஷ்ணன் மற்றும் வடக்கு மண்டல பொறுப்பாளர் திரு.ரவீந்திரநாத் ஆகியோர் மணமக்களின் பெயர்களை வாசித்தனர்.
- திருமதி. சுபாவிஜயரங்கன் மற்றும் குழுவினர் மக்கள் குடும்பத்தினரிடையே ஒருங்கிணைப்புப் பணியைச் செய்தார்.
- 60 விழாவுக்கு தலைமைச் சங்க துணைச் செயலாளர் திரு.R.L. முத்துவீரன் முன்னிலை வகித்தார்.
- தலைமைச் சங்க இணைத் தலைவர் திரு.D. மணிபாரதி, IAS (R) அவர்களும் அறக்கட்டளை பொருளாளர் திரு.K.S.M.வெங்கடசுப்பிரமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
- 24 மனை குலமுரசு பத்திரிகைக்கு குலமுரசு நிருபர் திரு.S. சிவனேஸ்வரன், தலைமை நிலையச் செயலாளர் ஆத்விக் M திரு.S.முத்தையா ஆகியோர் வழிகாட்டலில் ஒரு ஸ்டால் அமைக்கப்பட்டு சந்தா மற்றும் மணக்கோலம் வரன் பதிவுகள் சேகரிக்கப்பட்டன.
- வடக்கு மண்டலப் பொறுப் பாளர் திரு. S. வெற்றிவேந்தன் நன்றி கூறினார்.
திருமணமாலை நிகழ்ச்சி இனிதே சிறப்பாக நிறைவு பெற்றது.
தகவல்: S.சிவனேஸ்வரன், குலமுரசு நிருபர், சென்னை.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மணமாலை நிகழ்ச்சியின் யுட்யூப் காணொளிகள் :
01 தலைமை சங்கம் வழங்கும் " திருமணமாலை -2025 " - டாக்குமெண்டரி
02 பொதுச்செயலாளர் திரு V.அர்ஜுன் சூரஜ் உரை
03 துணை பொதுச்செயலாளர் திரு R.L முத்துவீரன் செட்டியார் அவர்களின் தொடக்க உரை
04 இணைத்தலைவர் திரு K K சிவசண்முகம் அவர்களின் வரவேற்புரை
05 தலைமை சங்கத்தின் திருமணமாலை - சென்னை பேச்சாளர்கள்
06 16 வீடு பெண் வரன்கள் விவரம்