மாநில கல்வி சாதனையாளர் விருதுகள் +2இல் முதல் 100 , 10இல் முதல் 25 -
அன்புள்ள 24 மனை உறவுகள் அனைவருக்கும் எனது அன்பான வணக்கங்கள்.
மாநில அளவிலான கல்வி சாதனையாளர் 2024 விழாவில் பரிசு பெறும் அனைத்து மாணவர்களுக்கும் எனது பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகள். கிட்டத்தட்ட 10000 கும் அதிகமான மாணவர்கள் ஆண்டுதோறும் நம் இனத்தில் +2 தேர்வு எழுதுகிறார்கள்.
அதில் முதல் 100 இடங்களைப் பெறுவது என்பது உங்களுக்கு படிப்பின் மீது உள்ள ஆர்வத்தைக் காட்டுகிறது. முதல் 100 இடங்களைப் பெற்ற மாணாக்கர்களைப் பாராட்டிப் பரிசளிக்கும் விழா 2024ல் துவங்கியிருக்கிறோம். இனி வரும் காலங்களிலும் வருடா வருடம் இந்த பரிசளிப்பு விழாவினைத் தொடர்ந்து நடத்தவுள்ளோம்.
+2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ செல்வங்களுக்கு ரூ 1,00,000 மும் 2 ஆம் பரிசாக ரூ 50,000 மும் , 3 ஆம் பரிசாக ரூ 25,000 மும் 24 மனை தெ லுங்கு செட்டியாொர்கள் தலைமை சங்கம் சார்பாக ஊக்கத்தொகையாக வழங்கப்பட உள்ளது.
இன்று பள்ளியில் பயின்றுகொண்டிருக்கும் அனைத்து மாணாக்கருக்கும் எனது அறிவுரை என்னவென்றால், அனைவரும் ஆர்வத்துடன் படித்து இந்த பரிசைப் பெறவேண்டும். உங்கள் பெற்றோரையும் உங்கள் குடும்பத்தையும், உங்கள் சொந்த பந்தங்களையும், நம் சமூகத்தையும் பெருமைப் படுத்தவேண்டும்.
படிப்பில் ஆர்வம், நடத்தையில் ஒழுக்கம், நோக்கத்தில் நேர்மை - இந்தப் பண்பாடுகளை நம் இன மாணவர்கள் உயிரெனப் போற்றி நடக்க வேண்டும் என்பதே என் அறிவுரை.
இந்த விழாவை நடத்த நன்கொடையளித்த நல்ல உள்ளங்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இப்படிக்கு
K.C.பழனிசாமி Ex. MP, Ex. MLA
இனப் பாதுகாவலர், சங்கத் தலைவர்
மாநில கல்வி சாதனையாளர் விருதுகள் 2024-10-13
https://24mtcthalaimaisangam.org/m/Education2024