[ Go Back ]

24 மனை தெலுங்கு செட்டியார்களின் தலைமை சங்கத்தின் அதிகாரபூர்வமான இணையதளம்,

தொழில் நுட்பத்தால் சமுதாயத்தை ஒருங்கிணைப்போம்
நமது 24 மனை தெலுங்கு செட்டியார்களின் தலைமை சங்கம் நூற்றாண்டைக்கடந்த பாரம்பரியமிக்கதாக இருந்தாலும் , இதுவரை நமக்கென்று ஒரு பொது இணையதளம் இல்லை . பல உள்ளூர் குழுக்களால் ஆரம்பிக்கபட்டவை , வணிக நோக்கத்துடன் , மணமாலை இணையங்களாகவே செயல்பட்டு வருகின்றன . இந்த குறையை போக்க புதிதாக தொடங்கப்பட்ட தகவல் தொழில் நுட்பக்குழுவின் முதல் முயற்சியாக, தலைமை சங்கத்தின் அதிகாரபூர்வமான இணையதளம், கிட்டதட்ட நூறு ஆண்டுகளுக்கு பின்னர் தைத் திங்கள் முதல் நாள் 14/01/2025 அன்று செவ்வாய்க்கிழமை முதல் பயன்பாட்டிற்கு வருகிறது. 

 இது தலைமை சங்கத்தில் முக்கியமான சமுதாய ஒருங்கிணைப்பு முயற்சியாகும். இதன் மூலம் நமது சமுதாயம் குறித்த அதிகார்வபூர்வமான தகவல்கள் , நமது முன்னோர்கள் பற்றிய ஆராய்ச்சி மற்றும் , தலைமை சங்கத்தின் நிகழ்வுகள் , செய்திகள் இவற்றை உலகம் முழுவதும் உள்ள நமது 24 மனை சமுதாய மக்கள் எளிதில் அறிந்து கொள்ளலாம் . தலைமை சங்கத்தின் 2025 செயல்பாட்டுக்கான 10 செயல் முறை திட்டங்கள் இந்த இணையதளத்தின் மூலம் நடைமுறை படுத்தப்படும். 

இப்போது உள்ள இணைய தள விவரங்கள் ஒரு அடித்தளம் மட்டுமே, வரும் நாட்களில் இதில் இன்னும் பல புதிய செயல்பாடுகள் சேர்க்கப்படும் .. இது குறித்த உங்கள் கருத்துகள் , யோசனைகளை பதிவு செய்யுங்கள் .  இந்த இணையதளம் உருவாகுவதற்கு உறுதுணையாகயிருந்த
V. அர்ஜூன் சூரஜ் - பொதுச்செயலாளர் 

R. L. முத்துவீரன் செட்டியார் -  துனைச்செயலாளர் 

சிவசங்கர் பாபு  - இணையதள பொறுப்பாளர் &  வடக்கு மண்டல அமைப்பாளர்  
ஆகிய அனைவருக்கும் நன்றி

 K.C. பழனிச்சாமி. Ex.M.L.A, Ex. MP 

இனபாதுகாவலர், சங்கத்தலைவர்,  24 மனை தெலுங்கு செட்டியார்கள் தலைமை சங்கம், 

நிர்வாக அறங்காவலர், 24 மனை தெலுங்கு செட்டியார் சாரிட்டபிள் டிரஸ்ட்
 203/155 ஈ.வே.ரா, பெரியார் நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம் சென்னை   - 60001

தெய்வீகமும் சமுதாயமும் நமது இரு கண்கள்