தெற்கு மற்றும் மேற்கு மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
நமது 24 மனை தெலுங்கு செட்டியார்கள் தலைமைச் சங்கத்தின் தெற்கு மற்றும் மேற்கு மண்டல கூட்டம் கோவை விஜய் பேரோடக்ஸ் இன் ஹோட்டல் அரங்கில் சரியாக 3.30 மணிக்கு தொடங்கியது.
நிகழ்ச்சிக்கு கோவை 24 மனை தெலுங்கு செட்டியார்கள் மகாஜன சங்கத் தலைவர் பெருந்தகை திரு தண்டபாணி செட்டியார் அவர்கள் தலைமை யேற்றார். தலைமைச் சங்க துணைச் செயலாளர்
செட்டி வீதி திரு பரமசிவம் அவர்கள் வரவேற்புரை வழங்கினார்கள். தலைமைச்சங்க ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் திரு பி சண்முகம் செட்டியார், துணைச் செயலாளர் டாக்டர் செல்வராஜன். மாவட்ட செயலாளர் திருப்பூர் ஐயப்ப திருவேங்கிட குமார் ஒருங்கிணைப்பு க்குழு உறுப்பினர்திரு. Er. நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மண்டலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பொறுப்பாளர்கள் வருகை தந்து கலந்து கொண்டனர்.
பொதுச் செயலாளர் திரு அர்ஜுன் சூரஜ்
இந்த தலைமைச் சங்கம் பொறுப்பேற்ற பின்னர் நடத்திய செயலாக்கங்களைப் பற்றியும் எதிர்கால செயல்திட்டங்களைப் பற்றியும் எடுத்துரைத்தார்
நிகழ்வுக்கு வந்த அனைவரும் சுய அறிமுகம் செய்து கொண்டு தங்கள் கருத்துக்களை வழங்கினார்கள்.
ஆக்கப்பூர்வமான கருத்துப் பரிமாற்றம் நடைபெற்றது. துணைச் செயலாளர் பெங்களூர் திரு பாண்டியன் நன்றி கூறினார். விழா நிகழ்வுகளை குலமுரசு ஆசிரியர் முனைவர் துரை அங்கு சாமி தொகுத்து வழங்கினார்.
தலைமை அலுவலகச்செயலாளர் திரு முத்தையா அனைவரையும் முன்நின்று வரவேற்றார்.
விழா அமைதியாக - சிறப்பாக - செறிந்த செய்திப் பரிமாற்றங்களுடன் வெற்றிகரமாக நடந்தேறியது.
கலந்து கொண்ட அனைவருக்கும் தலைமைச் சங்கத்தின் சார்பில் கனிவான நன்றி
இந்த கூட்டத்திற்கான முழு செலவுத் தொகையான ரூபாய் 12900 கோவை மகாஜன சங்கத் தலைவர் வணக்கத்திற்குரிய தண்டபாணி செட்டியார் அவர்கள் தானே முன்வந்து ஏற்றிருக்கிறார்.
அவர் கொடையுள் ளத்திற்கு தலைமைச் சங்கத்தின் சார்பில் நெஞ்சம் நிறைந்த நன்றியை தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
துரை அங்கு சாமி
செய்தி மற்றும் தகவல் தொடர்பு செயலாளர்