வடக்கு மற்றும் கிழக்கு மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
நமது 24 மனை தெலுங்குச் செட்டியார்கள் தலைமைச் சங்கத்தின் மண்டல வாரியாக ஆலோசனை கூட்டம் நடத்துவதாக முடிவு செய்து ,அதன்படி முதல் ஆலோசனை கூட்டம் 08-12-24 ஞாயிறு அன்று சென்னை காஸ்மோ பாலிடன் கோல்ப் கிளப்பில் வடக்கு மற்றும் கிழக்கு மண்டல ஆலோசனை கூட்டம் இணைத் தலைவர் திரு.K.K.சிவசண்முகம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. துணை செயலாளர் திரு.முத்து வீரன் செட்டியார் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்த கூட்டம் இனிதே ஆரம்பமானது பொது செயலாளர் திரு.V. அர்ஜுன் சூரஜ் அவர்கள் எதிர்கால சங்க நடவடிக்கைகள் குறித்து தனது கருத்துக்களை தெரிவித்தார். இணைத்தலைவர் அவர்கள் தனது தலைமையுரையில் மற்ற இனத்தவர் போல் நாமும் அரசியலில் பங்குபெற வேண்டும் என்ற கருத்தை தெரிவித்தார். மற்றும் துணைத் தலைவர் வடுகப்பட்டி A ஜெயராமன். துணைச் செயலாளர் முத்து வீரன் செட்டியார் கரூர் K C S R சிவகுமார் மற்றும் மண்டல பொறுப்பாளர்கள் அனைவரும் ஆலோசனைகள் வழங்கினர் இக்கூட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு கூட்டத்தினை சிறப்பித்தனர். இறுதியாக தலைமை நிலையச் செயலாளர் K.V. கிருஷ்ணன் அவர்கள் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் சைவ, அசைவ, உணவு பரிமாறப்பட்டது. . அடுத்த மண்டலம் தெற்கு, மேற்கு மண்டல ஆலோசனை கூட்டம் 15-12-24 ஞாயிறு அன்று கோவையில் நடைபெறவுள்ளது அது சமயம் சென்னை மண்டல கூட்டத்தில் கலந்து கொள்ள இயலாதவர்களும் கலந்து கொள்ளலாம்.
இந்த கூட்டத்திறக்கு அவர்கள் நேரத்தை, உழைப்பை கொடுத்து உதவிய திரு K.V.கிருஷ்னன் அண்ணன் அவர்களுக்கும், திரு.R.L.முத்துவீரன் செட்டியார் மாமா அவர்களுக்கும் மிக்க நன்றி. அந்த கூட்டம் சிறப்பாக நடந்ததற்கு அவர்கள் முக்கிய பங்கு வகித்தார்கள்.