[ Go Back ]

சாதனையாளர் விருது - மே 2025 - செல்வன் R. J. ரகுநந்தன் ரோலர் ஸ்கேட்டிங் விளையாட்டில் உலக சாதனை இண்டர்நேஷனல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் 2025

நமது தலைமை சங்கத்தின் சார்பில் 2025 சாதனையாளர் மே மாத விருது 16 வீடு மும்முடியர் குலத்தை சேர்ந்த உடுமலைப்பேட்டை R. ஜெயக்குமார் பிரித்தி தம்பதியினரின் மகன் செல்வன் R. J. ரகுநந்தன் ரோலர் ஸ்கேட்டிங் விளையாட்டில் உலக சாதனை இண்டர்நேஷனல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் 2025 ஆண்டுக்கு தேர்ந்தெடுக்க பட்டது கேள்விபட்டு தலைமை சங்கம் சார்பில் சாதனையாளர் விருது வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது 

 R.J. ரகுநந்தன், ரோலர் ஸ்கேட்டிங் விளையாட்டில் சிறு வயதிலேயே சிறப்பான திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார். VAV இன்டர்நேஷனல் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வரும் இவர், சமீபத்தில் இரண்டு மணி நேரம் இடைவிடாமல் ஸ்கேட்டிங் செய்து இன்டர்நேஷனல் யுகே புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் உலக சாதனை படைத்துள்ளார். மேலும், இவர் தமிழ்நாடு மாநில அளவிலான போட்டியில் மாநில வீரராகவும், தேசிய அளவிலான போட்டியில் திருப்பூர் மாவட்டத்திற்காக 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் தங்கப் பதக்கங்களையும் வென்றுள்ளார். சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற RSFI தேசிய போட்டியில் 2000 மீட்டர் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தையும், 1000 மீட்டர் பிரிவில் வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளார்.

அந்த தலைமைசங்க சாதனையாளர் விருதை 24/05/2025 அன்று சனிக்கிழமை மாலை 05.30 மணிக்கு நமது சொப்பியர் பலிவிதியர் குலதெய்வம் மரிக்கந்தை அருள்மிகு ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் ஆலயத்தின் வளாகத்தில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் நமது தலைமைசங்க நிர்வாகிகள் , நமது அறக்கட்டளை நிர்வாகிகள், மேற்கு மண்டல நிர்வாகிகள் மற்றும் நமது சமுதாய ஆன்றோர்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பிக்கயுள்ளார்கள்.

 

 R. L. முத்து வீரன் செட்டியார்
துனைச்செயலாளர்
24மனை தெலுங்கு செட்டியார்கள் தலைமை சங்கம்
கீழ்ப்பாக்கம் சென்னை